skip to main |
skip to sidebar
இவனின்
சந்தோஷம்
இவன் குடும்பத்தின்
சோகம்....
புகை பிடித்து
மது குடித்து
மடிபவன்....
காத்திருந்தேன்
விடிந்த பின்பும்
வரவில்லை
என் கனவில் நீ....
மீண்டும்
காத்திருப்பேன்
என் கனவு
தேவதை உனக்காக....
கவிதை போட்டியிலும்
ஓவிய போட்டியிலும்
முதல் பரிசு
தந்தார்கள்....
என் கவிதையும்
ஓவியமும்
உன் பெயர் தான்....
ஜனனம் மரணம்
இறைவன் கொடுப்பது....
இதனிடையில் இருக்கும்
வாழ்க்கை மனிதன்
நிர்ணயிப்பது....
இதில் சந்தோஷம்
நிம்மதியும் போதும்....
விரோதம் பொறாமையும்
வேண்டாம்....
அம்மா என்ற
சொல்லின்
அற்புதம்
புரிந்தது
என் மகள்
என்னை
அம்மா என்று
அழைத்தபோது....
எங்கள்
தேச பிதாவை
என்றும் மறந்ததில்லை
நாங்கள்...
அவர் படம்
பதித்த ருபாய்
நோட்டை வாங்காமல்
எந்த பணியும்
முடிக்க மாட்டோம்
நாங்கள்....
வரமொன்று
கேட்டேன்
இறைவனிடம்...
கொடுத்தான்
என் மகளாக....
வீட்டிற்க்கு ஒரு
மரம்
வளர்க்காவிட்டாலும்
வீதிக்கு ஒரு
மரமாவது
விட்டுவைப்போம்....
நினைப்பதும்...
நகைப்பதும்...
அடிகடி முகம்
பார்ப்பதும்...
தனிமையில் உரையாடி
கொள்வதும்...
இவை காதலுக்கும்
பித்துக்கும்
அறிகுறிகலாம்....
தேர்வு வினாத்தாளில்
கேள்விகள் நூறு
இருந்தும் எனக்கு
விடை ஒன்றுதான்
"தெரியவில்லை"....
செய்திதாள்கள் அனைத்தும்
கையில் இருந்தும்
படிக்க நேரமில்லை...
விடிவதற்க்குள்
அனைத்து வீட்டிலும்
விநியோகம் செய்துவிட்டு
கல்லூரிக்கு செல்ல
வேண்டும் என்பதால்....
என் சிறுவயது
மழலை பேச்சுக்கள்
குறும்புகள்
சண்டைகள்
அழுகைகள்
பிடிவாதங்கள்
நேரில் பார்க்கும் உணர்வு....
என் பிரதிபலிப்பில்
என் மகள்....
இரவின் வெளிச்சம்
நிலவு....
நிலவின் வெளிச்சம்
நீ....
இரவு பகல்
வானம் பூமி
நெருப்பு நீர்
நிலவு சூரியன்
வெய்யில் மழை
நான் நீ
எல்லாமே
எதிரும் புதிரும்....
எதிர்கால கனவுகளோடு
கல்லூரியில் சேர
காலடி எடுத்து வைத்தான்
பள்ளியின் முதல் மாணவன்...
சில லட்சங்களை
மட்டும் கேட்டது
அவன் இலட்சியங்களை வெல்ல
அந்த கல்லூரி நிர்வாகம்...
ஏழ்மை இவனின் சாபமா...
இவன் எதிர்கால
இந்தியா என்றார்கள்...
வாழ்க பாரதம்...
வாழ்க ஜனநாயகம்....
வெய்யில் உக்கிரத்தின்
தாகத்தை தணிக்க...
வீதியில் விற்றுகொண்டிருந்த
இளநீர் ஒன்றை குடித்தேன்...
சுட்டரிக்கும் வெய்யிலில்
கால்கடுக்க நின்று
வெட்டிக்கொடுத்தவன்
தாகத்தை தணிக்க...
பானையில் இருந்த
தண்ணீரை குடித்தான்....
மலர்களை இறைவன்
படைக்கும் முன்
நீ பிறந்திருந்தால்...
வேறு மலர்களை
படைதிருக்கமாட்டான்...
எவரெஸ்ட் சிகரத்தை
எட்ட முடிந்த எனக்கு...
உன் மனதை எட்ட
முடியவில்லை....
கனவுகள்
எனக்கு மிகவும்
பிடித்தவை...
அதில் மட்டுமே
நீயும் நானும்
சேர்ந்திருப்பதால்....
விடிந்தபின்பும்
கண் விழிக்க
மனமில்லாமல்
உறங்கி கிடந்தேன்....
கனவில் வந்த நீ
இன்னும் செல்லாததால்....
ஆயிரம் எதிர்கால
கனவுகளோடும்
கடமைகளோடும்
பறந்தார்கள்....
அனைவரையும் சோகத்தில்
ஆழ்த்தி உயிரை
மாய்த்தார்கள்....
குழந்தைகளும் விதிவிலக்கல்ல...
இரக்கமற்ற அந்த
நொடிப்பொழுது நடந்த
விமான விபத்தில்....
இனி ஒருக்கணமும்
இரக்கமற்றவனாக வேண்டாம்
இறைவனே....
என் நினைவு பதிவேட்டில்
நித்தமும் நூறு தடவை
உன் வருகையை
பதிவு செய்கிறாய்....
ஊதியமாய் என்னை
தருகிறேன் என்றால்
வேண்டாம் என்று
மறுக்கிறாய்....
அடிவாங்கி அழுத
குழந்தை....
உன் கை வலிக்கிறதா
அம்மா என்றது....
அவள் நிழலாய்
இருக்க ஆசையுண்டு....
அவள் வெட்கத்தால்
தலைகுனியும்
அழகை ரசிப்பதற்க்காக.....
அவள் கையின்
ஸ்பரிசம்பட்டவுடன்
பரவசப்பட்டு
சலனமற்று கிடந்தன
அவள் இட்ட கோலம்.....
வேர்வை சிந்தி
அப்பாவின் உழைப்பில்
மகளின் உயர் கல்வி....
திருமணத்துக்குப்பின்
மனைவி அந்தஸ்தில்....
அடுபங்கரையில்
வேர்வை சிந்தி
வீணாய் போனது.....
மரணம்
என்னை வேண்டுமானால்
வெல்லலாம்....
என்னுள் புதைந்து
கிடக்கும்
உன் நினைவுகளை அல்ல.....
உன் மௌனம்
என் மரணத்தின்
நுழை வாயில்....
என் கல்லறையில்
உன் கண்ணீராவது
என்னோடு பேசட்டும்....
குற்றம் புரியாமல்
என்னை சிறை வைத்தாய்
உன்னுள்....
அதை ஆயுள்
தண்டனையாக
மாற்றிவிடு.....
தாய்மை அடைய
மருத்துவ சிகச்சை
எடுப்போர் பலர்....
தாய் ஆனதும்
குழந்தையை விட்டு
மாயமானோர் சிலர்.....