skip to main |
skip to sidebar
அவளின்றி நான் இல்லை
இவ்வுலகில்...
அவள் தந்த வாழ்வே
வாழ்கிறேன் இம்மண்ணில்...
எனக்காக தன் வாழ்வை
அற்பணித்தவள்...
எல்லா வலிகளையும் எனக்காக
சுகமான சுமையாக்கியவள்...
அவளே என்னை பெற்றடுத்த அன்னை...
அன்னையராய் பிறப்பதே பெருமை...
அவளின் முதுமை காலத்தில்
அவளை பாதுகாப்பது
நமக்கு அதை விட பெருமை...
அன்னையரை போற்றுவோம்...
அன்னையர் தின வாழ்த்துக்கள் மூலம்...
என்னோடு நீ இருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
என் ஆயுள் காலத்தை
அதிகரிக்கும்
தருணங்கள்....
இருபத்தியெட்டு ஆண்டு
கனவு...
நூற்றி இருபத்தி ஓரு கோடி
மக்களின் விருப்பம்...
கைகோர்த்து நின்றார்கள்
லட்சிய வெறியோடும்
ஜெயிக்கும் உணர்வோடும்
பதினோரு சிங்கங்கள்...
வென்று தந்தார்கள்
தாய் நாட்டிற்கும்
இந்திய மக்களுக்கும்
மட்டை பந்து
உலக கோப்பையை...
இந்தியா தலை நிமிர்கிறது
இவர்களால்....
(இந்திய மட்டை பந்து வீரர்களுக்கு
இந்த கவிதை சமர்ப்பணம்...)
ஒருவரின்
அன்பையும்
சந்தோஷத்தையும்
துக்கத்தையும்
மற்றொருவருடன்
பகிர்ந்து கொள்ள
காத்திருக்கிறேன்...
தபால்பெட்டி....
********************************
தினமும் காலையில்
என்னை காண
அனைவருக்கும் ஆவல்...
மாதக்கடைசியில்
வேண்டாப்பொருளாய்
பழைய பாத்திரக்
கடையில் நான்...
தினசரி நாளிதழ்....
**********************************
எழுத நினைத்த
கவிதைக்கு வரிகள்
கிடைக்கவில்லை...
கண்மூடி அமர்ந்த
என்னுள் கவிதையாய்
நீ....
முகம் பார்த்து
மனம் பார்த்து
புகைப்படம் பார்த்து
குரல் கேட்டு
வருவது காதல் ...
உன் நிழல் மட்டுமே
பார்த்து வந்தது
என் காதல்....
திருவிழா வந்ததோர்
உணர்வு
தேர்தல் வந்ததும்
தனது ஓட்டுக்கு
கிடைக்கும் பணத்திற்காக
இவன் குடிமகன்....
பூகம்பத்தால் நாங்கள்
அழிந்துவிடவுமில்லை...
சுனாமியால் நாங்கள்
கரைந்துவிடவுமில்லை...
வெகுண்டு எழுவோம்
நாங்கள் மீண்டும்
எங்கள் தேசத்திற்காக...
நீ கருவாய் உருவான
நாள் முதல்
உன் முகம் காண
ஏக்கத்தோடு காத்திருந்தேன்...
தேவதையாய் பிறந்த நீ
இன்று என் மடியில்
என்னை கண்ட
புன்சிரிப்போடு....
கடிதம் கொடுத்து
காதலை சொல்ல
காத்திருந்தேன் உன்னிடம்...
பத்திரிகை கொடுத்து
திருமணத்திற்கு
அழைத்தாய் என்னிடம்...
காதலை சொல்ல
நினைத்தேன் நான்...
நட்பென்று புரிய
வைத்தாய் நீ...
வெங்காயம் உரித்தால்
மட்டும் கண்ணீர்
வரவில்லை....
விலையை கேட்டாலும்
கண்ணீர் வருகிறது....
மனிதப்பிறவி
பிறப்பும் இறப்பும்...
இதனிடையில் வாழும்
காலத்தில் நம்மிடையே...
தீண்டாமை பகைமை
பழிஉணர்ச்சி...
படிப்பு வேலை...
நட்பு காதல் திருமணம்...
பாசம் வேஷம்
போட்டி பொறாமை...
உணர்ச்சிகள் மிகுந்ததொரு
நம் மனித வாழ்க்கை...
சுதந்திர நாட்டில்
காதலிக்க இன்னும்
சுதந்திரமில்லை
ஜாதி மத
வேறுபாடுகளால்...
வரதட்சணை கொடுமை...
லஞ்சம் ஊழல்
தலை விரித்தாடுகின்றன
சுதந்திர நாட்டில்...
மீண்டும் ஒரு
பாரதியும் பெரியாரும்
காந்தியும்
பிறந்திட வேண்டும்
நம் சுதந்திர நாட்டின்
சுதந்திரம் காத்திடவும்
மனித வாழ்க்கையை
சீர்திருத்தவும்....
வீதியின் ஓரத்தில்
ஒருகழித்து கிடக்கிறாள்
வயோதிக மூதாட்டி
உண்ண உணவில்லாமல்
வசிக்க வீடில்லாமல்...
பணத்தை இறைத்து
புத்தாண்டு விழாகொண்டாடி
வீதியங்கும் வாழ்த்துக்கூறி
வாகனங்களில் பறக்கிறார்கள்
இரக்கமற்ற பலர்....
அவளை நேசிக்க
ஒரு ஜென்மம்...
அவளோடு வாழ்ந்திட
இன்னுமொரு ஜென்மம்...
நொடிப்பொழுதும்
அவளை பிரியாத
அந்த இரு ஜென்மம்...
இந்த வரம் மூன்று
கொடு இறைவனே...
பத்து மாதம்
தனது கருப்பையில்
சுமந்து பெற்றடுத்த
தாயின் முதிர்வு காலத்தில்...
பல லட்சத்தில் மகன்
கட்டிய வீட்டில்
வசிக்க ஒரு இடமில்லை...
என்னை பெற்றவளும்
கட்டியவளும்
நான் பெற்றடுதவளும்
என்னை கடிந்து கொண்டனர்...
என் ஒருவனால் அவர்களிடம்
பாசத்தை பகிர்ந்து
கொள்ள முடியவில்லையென்று...
இறைவன் கொடுத்த வரம்
மூவரும் எனக்காக...
மீண்டும் அந்த
நாட்கள் வாராதா....
அம்மாவின் கரம் பிடித்து
பள்ளிக்கு சென்ற நாட்கள்....
தந்தையோடு சென்று
பண்டிகைக்கு புது துணி
எடுத்த நாட்கள்....
தங்கையோடு தீபாவளி
பட்டாசு வெடித்த நாட்கள்....
பள்ளி நண்பர்களோடு
கபடி விளையாடிய நாட்கள்....
கல்லூரி நண்பர்களோடு
திரைப்படம் பார்த்த நாட்கள்....
இவையாவும் மீண்டும் வர
நான் சிறுவனாய் மாறிவிட
வரம் ஒன்று கொடு இறைவனே....
மகளை ஈன்றெடுத்த
வலியை விட....
திருமணத்திற்குபின் பிரியும்
வலியை விட....
பள்ளி சென்ற மகளின்
பத்திரமான வருகைக்காக
காத்திருக்கும் வலி அதிகம்....
அன்று என் தந்தை
கவலைப்பட
என் வருங்காலம் பற்றிய
கவலையின்றி திரிந்தேன்....
இன்று நான் தந்தையாய்
என் வருங்காலக்
கவலையோடும்
கனவுகளோடும்
அலைகிறேன்....
சுவையாய் உண்ணும் எனக்கு
உப்பில்லாத உணவும்
மிகவும் சுவைத்தது
இன்று...
ஊட்டியவள்
என் மகள் என்பதால்....
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை...
யாரிடம் கேட்டும்
பிரயோஜனமில்லை...
நேற்று சந்தித்த அவள்
மீது சந்தேகமுண்டு...
களவாண்டு விட்டாள்
என் இதயத்தை என்று...
எங்கு புகார் செய்வேன்
இந்த காதல் திருட்டை...
தருவாளா பதிலாக
அவள் இதயத்தை என்று....
பூமித் தாயின்
உஷ்ணத்தை குளிர்விக்க
மேக மகளின்
அழுகை
மழை....
கரு நீல வானில்
மின்னும்
நட்ஷத்ரிகங்களிடையே
அழகு வெள்ளை நிலா...
மறைந்த நிலவின்
சூரிய ஒளியில்
அழகு வெள்ளை வானம்...
இயற்கையின் விசித்திரங்கள்
இன்னும் பல....
ஆறறிவு படைத்த
மனிதனிடம்
ஜாதி மதங்கள் உண்டு
பொறாமை மொழிவெறிகள் உண்டு...
ஐந்து அறிவு
படைத்த விலங்கிடம்
பாகுபாடுகள் இல்லை...
மனிதனும்
ஐந்து அறிவு கொண்ட
மனித விலங்காகவே
படைக்கபட்டிருக்கலாம்....
கனவுகள்
நாளைய நிஜங்கள்....
பொய்கள்
நாளைய உண்மைகள்....
விதைகள்
நாளைய மரங்கள்....
காதலர்கள்
நாளைய தம்பதிகள்....
நண்பர்கள்
நாளையும் நண்பர்கள்....
நான் இறந்தப்பின்
என் கண்களை
உன்னோடு வைத்துக்கொள்
உன்னை நான்
எப்பொழுதும்
பார்க்கவேண்டும் என்பதால்....
என் இதயத்தை
மட்டும் எரித்து
விடாதே அதில்
நீ இருப்பதால்....
இறந்தால் மட்டும்
தான் உறுப்பு
தானமா....
நான் இப்பொழுதே
தானம்
செய்துவிட்டேன்
உன்னிடம்
என் இதயத்தை....
என் இதயம்
ஒரு கண்ணாடி
அதில் உன் உருவம்
பிரதிபலிப்பதால்....
அதை உடைப்பதும்
பாதுகாப்பதும்
உன்னிடமே உள்ளது....
மௌனம்
சம்மதம்
என்றார்கள்....
இல்லை....
உன் மௌனம்
என் நரகம்....
உருவங்கள் மாறலாம்...
ஆசைகள் மாறலாம்...
ஆனால் நம்
இலட்சியங்களும்
சிந்தனைகளும்
ஒன்றுதான்...
நம் நண்பர்கள்
என்பதால்...