Saturday, September 26, 2009

பிறவிப் பயன்

வருடங்கள் வேண்டாம்
மாதங்கள் போதும்...
நாட்கள் வேண்டாம்
சிலமணி நேரங்கள் போதும்...
நிமிடங்கள் வேண்டாம்
நொடிகள் போதும்...
நீ என்னோடு வாழ்ந்தால்
என் ஆயுள் காலத்திற்கு...
இந்த பிறவிப் பயனை அடைந்திட....


கனவும் நீயும்

இரவில் விளக்கை அணைக்காமல்
ஏன் உறங்குகிறாய் என்றார்கள்
நீ என் கனவில்
நித்தமும் பிரகாசமாய்
வருவது அறியாமல்....
இரவு விடிவதே
பிடிப்பதில்லை கனவு
கலைந்து நீயும்
சென்று விடுவதால்....


மனம்

தெளிந்த நீரோடையை
போல் இருந்த என் மனம்
உன்னை கண்டப்பின்
கல்லெறிந்து கலங்கியது
போல் ஆனது...