Sunday, July 26, 2009

கண் தானம்


இவர்கள் எதுவும்
பார்த்ததில்லை....
காதலித்ததில்லை....
அழகின் ரசனை....
வெளிச்சத்தின் ஒளி....
வர்ணத்தின் ஜாலங்கள்....
யாவும் கண்டதில்லை....
நம்பிக்கையோடு
வாழ்கிறார்கள்....
விடியல் வரும் என்று....

ஜோதிடம்

நல்ல நேரத்தில்
ஆரம்பித்த தொழில்
நஷ்டத்தில்....
பொருத்தம் பார்த்த
திருமணம் விவாகரத்தில்....
எதுவும் பார்க்காமல்
சேர்ந்த நட்பு
இன்னும் தொடர்கிறது....
ஜோதிடம்
பொய்யா மெய்யா
விடைதேடிக்கொண்டிருக்கிறேன்.....

இரவுகள்

இரவுகள் விடிய
அதிக நேரங்கள்
ஆகட்டும்....
கனவிலாவது
நீ என்னோடு
இருக்கும் நேரங்கள்
அதிகமாகும்
என்பதால்....

மறுஜென்மம்


வேண்டாம் எனக்கு
மறுஜென்மம்
உன்னை அடையாவிடின்
என் செய்வது....
உன்னோடு வாழ்ந்த
இந்த ஜென்மமே
போதும்....

வெளிச்சம்


இவர்களுக்கு
விடிந்தும்
வெளிச்சமில்லை....
இவர்கள்
குருடர்கள்....

தவறுகள்

பிரம்மன் உன்னை
படைத்தது....
நான் உன்னை
சந்தித்தது.....
இறைவன் நம்மை
பிரித்தது....
தவறுகள் திருத்தபடட்டும்
மறுஜென்மத்தில்....

ஐயனை தரிசிக்க...


காலணி இல்லாமல்...
கைசட்டை கால்சட்டை
அணியாமல்...
ஊர்தி ஏதும் இல்லாமல்
வெளியில் செல்லமாட்டோம்....
வேட்டி மட்டும் அணிந்து...
மேல்சட்டை இல்லாமல்...
வெற்று காலுடன்...
மலை பாதையில்
கற்கள் பாதத்தை
பதம் பார்க்க நடக்கிறோம்
ஐயனை தரிசிக்க நாங்கள்...
சுவாமியே சரணம் அய்யப்பா.....

Friday, July 24, 2009

வானவில்


வானம் கூட
எட்டி பார்த்தது
மழை பெய்யாமல்
வானவில்லா....
நீ இங்கு
வந்து போனது
தெரியாமல்....


Thursday, July 23, 2009

ஆசை


கண்ணிமைக்கும்
பொழுதுகளில் மட்டும்
உன்னை காண
ஆசை....
மூச்சு விட மறக்கும்
தருணத்தில் மட்டும்
உன்னை மறந்து விட
ஆசை....


அழகிய ஓவியம்


இறைவன் படைப்பில்
ஒரு அழகிய
ஓவியம்....
குழந்தையின் சிரிப்பு....


மறந்தேன்


எல்லாவற்றையும்
மறந்த நான்....
உன்னை மட்டும்
மறக்க மறந்தேன்....


Wednesday, July 22, 2009

தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து


ஆலமரமாய் நீங்கள்...
கிளைகளாய் நாங்கள்
உயர்ந்து விரிந்தாலும்...
ஆழமான வேராய்
நீங்கள் இருந்து
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்....


சுவடுகள்


கடற்கரை மணலில் பதிந்த
உன் பாத சுவடுகளை
அளவெடுத்து வரைந்தேன்....
அழகிய ஓவியம்
என்றார்கள்....


வெளிச்சம், இருட்டு


இமைகள்
மூடி
இருந்தேன்
வெளிச்சமாய் நீ....
கண் திறந்து
பார்த்தேன்

இருட்டாய்
என்
அறை....


புரியவில்லை


நீ அருகில்
இருந்த
பொழுது
வராத உன் எண்ணங்கள்....
நீ விலகி சென்ற பொழுது
காட்டாற்று வெள்ளமாய்
ஓடுகிறது மனதில்....
காரணம் புரியாமல்
விடை தேடிக்கொண்டிருக்கிறேன்
ஏன் என்று....


Tuesday, July 21, 2009

வரம்


இறைவன் எனக்கு
கொடுத்த
வரம்
என் மகள்....

Wednesday, July 15, 2009

ஜாதி

ஜாதி சான்றிதள்
கொடுத்து சேர்த்திய
பள்ளியின் பாடத்தை
படித்துக்கொண்டிருந்தாள்
என் மகள்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா"....


உன்னால்

சொர்க்கம் உண்டு என்று
நம்பியதில்லை
உன்னை காணும் வரை....
நரகம் உண்டு என்று
நம்பியதில்லை
உன்னை பிரியும் வரை.....


தனிமை


நான் தனிமையில்
இருப்பதைவிட....
உன்னுடன் கழிக்கும்
பொழுதுகளே அதிகம்....
கனவில் மட்டும்.....


Friday, July 10, 2009

உன் வார்த்தை

என் மரணத்தை விட
உன் வார்த்தைகளுக்கு தான்
பயந்து
மதிப்பளிக்கிறேன்.....


கனவு


உன் காதல்
கடிதங்களுக்கு
பதில் எழுதுகிறேன்
கனவில் மட்டும்....


புரியவில்லை


கண்டவுடன் மௌனம்
சாதித்தும்...
தலை கவிழ்ந்ததும்...
காதல் வெக்கத்தில்
என்று நினைத்தேன்....
என்னை பிடிக்காமல்
செய்தாயென்று தெரியாமல்....


மௌனம்


கத்தியின்றி
ரத்தமின்றி
என்னை கொல்லும்
ஓர் ஆயுதம்
உன் மௌனம்.....


Wednesday, July 8, 2009

நம் காதல்


நான் இதயமாக
நீ உயிராக....
நான் கண்களாக
நீ கருவிழியாக....
நான் காற்றாக
நீ சுவாசமாக....
மொத்தத்தில் நீ இன்றி
நான் இல்லை....


Tuesday, July 7, 2009

பிரிவு

பிரிந்தது நாம் மட்டும் தான்....
நம் உள்ளங்களும்
நம் காதலும் அல்ல...
என்றும் நம் காதல்
நினைவுகளுடன்....Monday, July 6, 2009

உடன்பிறப்புக்கள் - ப்ரீத்தி, வித்யா, சந்தனா, ரவி, அசோக், பிரனேஷ், ஹரி, கிரி, அபர்னா வுக்கு


வேறு வேறு கருவறையில்
நாம் பிறந்திருந்தாலும்....
நம் அனைவரின் உள்ளங்களும்
ஒன்றுபட்டு....
பல உடல் ஓர் உயிராக...
பாசப்பிணைப்புடன்....
உனக்கு நான் எனக்கு நீ என்று
இன்று போல் என்றும்
நம் அன்பு....
நிலைத்திருக்க வேண்டும்....

அன்று நம் சிறு வயதில்
பள்ளி விடுப்பு நாட்களில்
நாம் விளையாடியது,
செல்ல சண்டை போட்டது....
அனைத்தையும் திரும்பிப்பார்க்கிறேன்
ஏக்கத்தோடு.....

மறு ஜென்மமும் நாமே
உடன்பிறப்புக்கள் ஆவோம்.....


Thursday, July 2, 2009

என் இதயம்


என் நினைவுகளை மறந்து
உன் நினைவுகளை மட்டும்
நினைத்துக்கொண்டிருக்கும்
ஒரு இதயம்.......


கல்லூரி

என் முதல் காதல்
பிறந்த இடமும்
இறந்த இடமும்....