Wednesday, July 28, 2010

காணவில்லை


எங்கு தேடியும்
கிடைக்கவில்லை...
யாரிடம் கேட்டும்
பிரயோஜனமில்லை...
நேற்று சந்தித்த அவள்
மீது சந்தேகமுண்டு...
களவாண்டு விட்டாள்
என் இதயத்தை என்று...
எங்கு புகார் செய்வேன்
இந்த காதல் திருட்டை...
தருவாளா பதிலாக
அவள் இதயத்தை என்று....


மழை


பூமித் தாயின்
உஷ்ணத்தை குளிர்விக்க
மேக மகளின்
அழுகை
மழை....


இயற்க்கை


கரு நீல வானில்
மின்னும்
நட்ஷத்ரிகங்களிடையே
அழகு வெள்ளை நிலா...
மறைந்த நிலவின்
சூரிய ஒளியில்
அழகு வெள்ளை வானம்...
இயற்கையின் விசித்திரங்கள்
இன்னும் பல....


மனிதனும் விலங்கும்


ஆறறிவு படைத்த
மனிதனிடம்
ஜாதி மதங்கள் உண்டு
பொறாமை மொழிவெறிகள் உண்டு...
ஐந்து அறிவு
படைத்த விலங்கிடம்
பாகுபாடுகள் இல்லை...
மனிதனும்
ஐந்து அறிவு கொண்ட
மனித விலங்காகவே
படைக்கபட்டிருக்கலாம்....


Monday, July 19, 2010

மாறாத உண்மை


கனவுகள்
நாளைய நிஜங்கள்....
பொய்கள்
நாளைய உண்மைகள்....
விதைகள்
நாளைய மரங்கள்....
காதலர்கள்
நாளைய தம்பதிகள்....
நண்பர்கள்
நாளையும் நண்பர்கள்....


என் உயில் சாசனம்


நான் இறந்தப்பின்
என் கண்களை
உன்னோடு வைத்துக்கொள்
உன்னை நான்
எப்பொழுதும்
பார்க்கவேண்டும் என்பதால்....
என் இதயத்தை
மட்டும் எரித்து
விடாதே அதில்
நீ இருப்பதால்....


தானம்


இறந்தால் மட்டும்
தான் உறுப்பு
தானமா....
நான் இப்பொழுதே
தானம்
செய்துவிட்டேன்
உன்னிடம்
என் இதயத்தை....


இதயம்


என் இதயம்
ஒரு கண்ணாடி
அதில் உன் உருவம்
பிரதிபலிப்பதால்....
அதை உடைப்பதும்
பாதுகாப்பதும்
உன்னிடமே உள்ளது....


உன் மௌனம்


மௌனம்
சம்மதம்
என்றார்கள்....
இல்லை....
உன் மௌனம்
என் நரகம்....


நண்பர்கள்


உருவங்கள் மாறலாம்...
ஆசைகள் மாறலாம்...
ஆனால் நம்
இலட்சியங்களும்
சிந்தனைகளும்
ஒன்றுதான்...
நம் நண்பர்கள்
என்பதால்...


தீபாவளி


வீதியெங்கும்
வீட்டு வாசலெங்கும்
காகித குப்பை....
பிள்ளையின் அழுகைக்கு
மீண்டும் பட்டாசு
வாங்கினான் ஆயிரம்
ரூபாயை கரியாக்க....
வழிமறித்த
ஏழை சிறுவனின்
பசிக்கு பணமில்லை என்றான்....