skip to main |
skip to sidebar
நண்பா நம் நட்பின் வயது 36!!!
தொலைக்காட்சி இல்லா
காலம் முதல்
கைபேசியில் படம் பார்க்கும்
காலம் வரை...
கருப்பு வெள்ளை
புகைபடக்காலம் முதல்
செல்பி காலம் வரை....
நம் நட்பு தொடர்கிறது...
இனி நிலவுக்கும் மார்சுக்கும்
நாம் சுற்றுலா செல்லும்
காலம் வரை
நம் நட்பு தொடரும் நண்பா.....!!
நண்பன் அர்விந்த்க்கு சமர்ப்பணம்....
என் சிறு வயது
சேட்டைகள்
பிடிவாதங்கள்
குறும்புகள்
கெஞ்சல்கள்
கொஞ்சல்கள்
பிரதிபலிக்கும்
நிஜங்களாய்
என் குழந்தைகள்....
உன்னோடு நான் இருக்கும்
தருணங்கள் எனக்கு இனிமை...
நீ என்னோடு இல்லாத தருணங்கள்
எனக்கு வெறுமை...
உன்னோடு பேசிக்கொண்டிருந்தால்
என்றும் புதுமை...
நீ இல்லாமல் பேசிக்கொண்டிருந்தால்
என்றும் தனிமை...
என்னோடு நீ இருந்தால்
தொலை தூரமும்
பக்கமாய் உணர்கிறேன்...
நீ என்னோடு
இல்லாதிருந்தால் பக்கமும்
தொலை தூரமாய் அறிகிறேன்...
நீ என்னோடு இருக்கும்பொழுது
நம் குடும்பத்தை ஒன்றாக
இணைக்கிறாய்...
என்னோடு நீ இல்லாதபொழுது
நம் குடும்பத்தை
என்னை விட்டு பிரிக்கிறாய்...
இப்படிக்கு கைபேசி பற்றி நான்....
அம்மாவின் பாசம்...
மனைவியின் காதல்...
மகளின் அன்பு...
நண்பனின் நட்பு...
உடன்பிறந்தவர்களின் நேசம்...
இவற்றுக்காக இன்னும்
நூறு வருடங்கள்
ஏழு ஜென்மமும்
வாழ்ந்திட ஆசை...
சூரியன் தினமும்
உதிக்கின்றான்
குழந்தையின் மழலை
சிரிப்பை காண்பதற்காக....
சந்திரன் தினமும் இரவில் மிளிர்கின்றான்
நிலா சோறுட்டி
உறங்க வைக்கும்
அன்னைக்காக....