Saturday, May 5, 2012

மனிதன்

ஒழிப்போம்
குழந்தை தொழிலையும்
முதியோர் இல்லத்தையும்...
அரவணைப்போம்
அனாதை குழந்தைகளையும்
நம் பெற்றோர்களையும்...
கொடுப்போம்
அனைவர்க்கும் கல்வியும்
இல்லாதோருக்கு நம்மால் இயன்ற
உதவிகளையும்...
மகானாக வேண்டாம்...
மனிதனாய் வாழ்ந்தால் போதும்...

காதல் புலம்பல்

நரகத்தை காண்கிறேன்
நீ என்னோடு
இல்லாத தருணங்களில்...
சொர்கத்தை காண்கிறேன்
நீ என்னோடு
இருக்கும் தருணங்களில்...

***********************************


நூறாண்டு நீ இல்லாமல்

வாழ்வதை விட
அரை நிமிடம்
உன்னோடு வாழ்ந்து
மடிவது மேல்...


அம்மா

உச்சரித்த முதல்
வார்த்தை அம்மா...
பசித்தால் கூறும்
வார்த்தை அம்மா...
வலித்தால் கதறும்
வார்த்தை அம்மா...

எல்லாம் அவளாக
இருப்பின் எப்படி
மறக்கிறார்கள்
திருமணம் ஆனதும்
அம்மாவை...

கவிதை

ஒரு வார்த்தையில்
புரிந்தது கவிதை...
குழந்தை மழலை
பாஷையில் அம்மா என்று
அழைத்தபொழுது...

தாத்தா

எங்களின் ஒவ்வொருவர் வருகைக்கும்
நீங்கள் காத்திருப்பீர்கள்
சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு...

இந்த வருகைக்கும்
காத்திருந்தீர்கள்
புகைபடமாய்...

உங்கள் உருவம் இருந்தது
ஒலி மட்டும் இல்லை...

இனி உங்கள் உருவம்
மட்டும் காத்திருக்கும்
புகைபடமாய்
எங்களின்
வருகைக்காக என்றும்...

பிரியத்தோடு அழைக்க...

நம் வயது முதிர்கையில்
நமக்கு பிரியமான
முதியவர்களை
அழைக்கும் வாய்ப்பை இழக்கிறோம்...
இதற்காக வேணும் நான்
குழந்தையாய் இருந்து விட
விரும்புகிறேன்...
இன்று நான் அழைக்க
யாருமில்லை
தாத்தா என்றும் பாட்டி என்றும்....

சொர்க்கம்

அம்மாவின் அன்பு
அப்பாவின் அரவணைப்பு
நண்பனின் நட்பு
குழந்தையின் சிரிப்பு
மனைவியின் காதல்
இவை நாம் வாழும்போது
பூமியில் கிடைக்கின்ற
சொர்க்கம்...

ஆயுள்

நீ என்னோடு
பேசிக்கொண்டோ திட்டிக்கொண்டோ
தொட்டுக்கொண்டோ கொஞ்சிக்கொண்டோ
எவ்வாறாக இருந்தாலும்
என்னோடு தொடர்பில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் ஆயுள் கூடுகிறது...