Monday, May 31, 2010

வெளிச்சம்

இரவின் வெளிச்சம்
நிலவு....
நிலவின் வெளிச்சம்
நீ....


Saturday, May 29, 2010

எதிரும் புதிரும்

இரவு பகல்
வானம் பூமி
நெருப்பு நீர்
நிலவு சூரியன்
வெய்யில் மழை
நான் நீ
எல்லாமே
எதிரும் புதிரும்....


Tuesday, May 25, 2010

கல்வி

எதிர்கால கனவுகளோடு
கல்லூரியில் சேர
காலடி எடுத்து வைத்தான்
பள்ளியின் முதல் மாணவன்...
சில லட்சங்களை
மட்டும் கேட்டது
அவன் இலட்சியங்களை வெல்ல
அந்த கல்லூரி நிர்வாகம்...
ஏழ்மை இவனின் சாபமா...
இவன் எதிர்கால
இந்தியா என்றார்கள்...
வாழ்க பாரதம்...
வாழ்க ஜனநாயகம்....


வெய்யில்

வெய்யில் உக்கிரத்தின்
தாகத்தை தணிக்க...
வீதியில் விற்றுகொண்டிருந்த
இளநீர் ஒன்றை குடித்தேன்...
சுட்டரிக்கும் வெய்யிலில்
கால்கடுக்க நின்று
வெட்டிக்கொடுத்தவன்
தாகத்தை தணிக்க...
பானையில் இருந்த
தண்ணீரை குடித்தான்....


மலர்கள்

மலர்களை இறைவன்
படைக்கும் முன்
நீ பிறந்திருந்தால்...
வேறு மலர்களை
படைதிருக்கமாட்டான்...


உன் மனதில்

எவரெஸ்ட் சிகரத்தை
எட்ட முடிந்த எனக்கு...
உன் மனதை எட்ட
முடியவில்லை....


பிடித்தவை

கனவுகள்
எனக்கு மிகவும்
பிடித்தவை...
அதில் மட்டுமே
நீயும் நானும்
சேர்ந்திருப்பதால்....


கனவு

விடிந்தபின்பும்
கண் விழிக்க
மனமில்லாமல்
உறங்கி கிடந்தேன்....
கனவில் வந்த நீ
இன்னும் செல்லாததால்....


ஆகாயத்தில் சிதைந்த கனவுகள்


ஆயிரம் எதிர்கால
கனவுகளோடும்

கடமைகளோடும்

பறந்தார்கள்
....
அனைவரையும்
சோகத்தில்
ஆழ்த்தி
உயிரை
மாய்த்தார்கள்
....
குழந்தைகளும்
விதிவிலக்கல்ல...
இரக்கமற்ற
அந்த
நொடிப்பொழுது
நடந்த
விமான
விபத்தில்....
இனி
ஒருக்கணமும்
இரக்கமற்றவனாக
வேண்டாம்
இறைவனே
....


Wednesday, May 19, 2010

பதிவேடு

என் நினைவு பதிவேட்டில்
நித்தமும் நூறு தடவை
உன் வருகையை
பதிவு செய்கிறாய்....
ஊதியமாய் என்னை
தருகிறேன் என்றால்
வேண்டாம் என்று
மறுக்கிறாய்....


பாசம்

அடிவாங்கி அழுத
குழந்தை....
உன் கை வலிக்கிறதா
அம்மா என்றது....


நிழலாய்

அவள் நிழலாய்
இருக்க ஆசையுண்டு....
அவள் வெட்கத்தால்
தலைகுனியும்
அழகை ரசிப்பதற்க்காக.....


ஸ்பரிசம்

அவள் கையின்
ஸ்பரிசம்பட்டவுடன்
பரவசப்பட்டு
சலனமற்று கிடந்தன
அவள் இட்ட கோலம்.....


வேர்வை

வேர்வை சிந்தி
அப்பாவின் உழைப்பில்
மகளின் உயர் கல்வி....
திருமணத்துக்குப்பின்
மனைவி அந்தஸ்தில்....
அடுபங்கரையில்
வேர்வை சிந்தி
வீணாய் போனது.....


மரணம்

மரணம்
என்னை வேண்டுமானால்
வெல்லலாம்....
என்னுள் புதைந்து
கிடக்கும்
உன் நினைவுகளை அல்ல.....


மௌனம்

உன் மௌனம்
என் மரணத்தின்
நுழை வாயில்....
என் கல்லறையில்
உன் கண்ணீராவது
என்னோடு பேசட்டும்....


மனு

குற்றம் புரியாமல்
என்னை சிறை வைத்தாய்
உன்னுள்....
அதை ஆயுள்
தண்டனையாக
மாற்றிவிடு.....


வினோதம்

தாய்மை அடைய
மருத்துவ சிகச்சை
எடுப்போர் பலர்....
தாய் ஆனதும்
குழந்தையை விட்டு
மாயமானோர் சிலர்.....


பொய்

பொய் நிஜம் ஆகலாம்...
ஆனால் நீ மட்டும்
என் வாழ்வில்
பொய் ஆகி போன நிஜம்....