Tuesday, June 30, 2009

வெளிச்சம்

இரவில் சூரிய வெளிச்சம்
என்றேன்...
ஆச்சிர்யம் என்றார்கள்.....
நீ என் அருகில் இருப்பது
தெரியாமல்.....


கனவும் நிஜமும்


நான் உன்னை காதலிக்கறேன்
என்று கூறியபொழுது
நீ புன்னகைத்து கூறினாயே
நானும் தான் என்று
அது கனவு....
நான் கூறியவுடன்
முறைத்தாயே அது நிஜம்....
கனவு சிலிர்க்கிறது....
நிஜம் சுடுகிறது....



ஏமாற்றம்


கண்களில் ஆரம்பித்த காதல்
நம் கல்யாணத்தில் முடியும்
என்று நினைத்தேன்....
இப்படி உன் கல்யாணத்தில்
முடியும் என்று
நினைத்தும் பார்க்கவில்லை.....


மாற்றம்


உன் நண்பனாய் இருந்த பொழுது
இருவரும் அதிகம் பேசினோம்....
உன் காதலனாய் நான் மட்டும்
அதிகம் பேசினேன்....
என் மனைவியாய் ஆனப்பின்
நீ மட்டுமே பேசினாய்....


காதலித்து பார்


இன்று உன்னை கண்டபொழுது
கேட்க துடித்தேன்...
தினமும் எப்படி உனக்கு
அழகு கூடுகிறதென்று....
அப்புறம் புரிந்தது
நீ என்னை காதலிப்பதால் என்று....!!!!


தினமும்


தினமும் இரு தடவை
சூரியன் உதிக்காதா என்று
ஏங்கியதுண்டு....
நீ எனக்கு தினமும்
காலையில் சொல்லும்
வாழ்த்து செய்திக்காக.....


ஆசை


உன் கரம் பிடித்து
நடக்க ஆசைப்பட்டு....
உன் நிழலை பிடித்து
நடந்தேன்....


மின்னல்

மின்னலில் தோன்றிய
வெளிச்சமாய் கண்ணிமைக்கும்
நேரத்தில் மறைந்துபோனாய்...
அந்த மின்னலின்
பாதிப்பிலிருந்து இன்னும்
நான் மீளவில்லை.....


Monday, June 29, 2009

கனவு தேசம்



ஜாதிகள் இல்லை....
லஞ்சம்
இல்லை....
குழந்தை
தொழில் இல்லை....
அனாதைகள்
இல்லை....
வறுமை
இல்லை...
பசி
பட்டினி இல்லை...
திருட்டு
இல்லை....
வேலை
இல்லா திண்டாட்டமும் இல்லை....
அனைவருக்கும்
வசிக்க ஒரு வீடு...
மூன்று
வேளை உணவு ...
கல்வி
, வேலை...
இதுவே
என் கனவு தேசம்....
என்று
உருவாகுமோ.....


Sunday, June 28, 2009

உன்னை அடைவேன்

நான் உன்னை
அடையாமல் போக...
நீ அந்த சுட்டெரிக்கும்
சூரியனும் அல்ல....
நீ என்னை
வெறுத்து ஒதுக்கிவிட...
நான் சுனாமியும் அல்ல...
கரம்பிடிப்பேன் உன்னை
கண்டிப்பாக....


உன் அன்பு


உன்னிடம் நான் தோற்றுவிட்டேன்
உன்
அன்பில்......
என்
வாழ்நாள் முழுவதும்
தோற்றுவிட
விருப்பம்.....

****************************
உன் அன்பு மட்டும் போதும்
என் வாழ்நாள் முழுவதும்....
வேறொன்றும்
தேவையில்லை
உன்னிடம்
இருந்து......


Friday, June 26, 2009

கடவுளின் குழந்தைகள்


இவர்களின் மழலை பேச்சுக்கள்
இன்னும் மாறவில்லை.....
இவர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்
இன்னும் மனதளவில்
....
இவர்களிடம் எதுவும் இல்லை
கொடுப்பதற்கு புன்னகையை தவிர
...
இவர்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் அல்ல....
கடவுளின் குழந்தைகள்....


Thursday, June 25, 2009

என் மகள்


எந்தப் பல்கலைகழகத்திலும்
படிக்காமல்
....
எனக்கு
அப்பா என்ற
பட்டம்
கொடுத்தவள்....


Wednesday, June 24, 2009

நீ


ஒரு எழுத்தில்
அழகையும்
கவிதையையும்
எழுதச் சொன்னார்கள்.....
நான்
உடனே எழுதினேன்
நீ
.............



விபத்து

கண்ணிமைக்கும் நேரத்தில்
எமனின் வலையில் சிக்கும்
பரிதாபத்திற்கு உரியவர்கள்.....


நீயும் நானும்


நாட்கள் ஓடின....
மாதங்கள்
ஓடின....
வருடங்களும்
ஓடின....
நீயும்
நானும் மறந்துவிடவில்லை
நம்
பிரிவை மட்டும்......


தேவதை

நேற்று வரை கண்டதில்லை
தேவதையை....
இன்று உன்னை கண்டப்பின்
முடிவுக்கு வந்தேன்...
கண்டேன் தேவதையை.....


Monday, June 22, 2009

அரவிந்த் நண்பனுக்கு ஒரு கடிதம்


நம் பள்ளிப்பருவத்தில்
நாம்
சுற்றித்திரிந்த நாட்கள்....
இருவரும்
மணிக்கணக்கில் பேசிய
பேச்சுக்கள்
...
சுற்றின
இடங்கள்....
பார்த்த
திரைப்படங்கள்....
போட்ட
சண்டைகள்...
அந்த
நாட்கள் திரும்ப வராதோ நண்பா ....

இன்று
நாம் இருவரும் நடுத்தர வயதில்....
குடும்ப
பொறுப்புகள்...
பிள்ளைகளின்
படிப்பு...
வேலைபழு
....

மிகத்தொலைவில்
வேறு வேறு
தேசத்தில்
வசித்தாலும்....
நம்
இதயங்கள் இன்றும் அன்று போல்
நெருங்கியே
உள்ளன....
அந்த
பள்ளி நாட்கள் திரும்பவும்
வராதோ
நண்பா....


கவிதை

உன் பெயரைச்சொன்னேன்
கவிதை என்றார்கள்....

உன்னை நினைத்து கவிதை
எழுத முயன்றேன்.....
அப்புறம் தோன்றியது
கவிதைக்கே ஒரு
கவிதையா என்று.....


ரோஜாவும் நீயும்


ரோஜாமேல் படர்ந்த
பனித்துளிகள் போல.....
உன் பளிங்கு மேனியில்
வியர்வைதுளிகள்.....
ரோஜா இதழ்கள் போன்ற உன்
உதடுகள்.....
ரோஜா முள்ளை போல
என்னைக்குத்திய உன் பேச்சுக்கள்....
நான் உன்னை காதலிக்கிறேன்
என்று கூறியபொழுது....


வரதட்சணை


மனைவியின் புன்னகை வேண்டாமென்று
அவளின் பொன்னகைக்காக
கொடுமைப்படுத்தும்......
பேராசைக்கார சோம்பேறிக் கணவன்.....
அவனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்
கொடுமைக்கார மாமியார்.....
இவர்களை திருத்த இன்னும் நூறு
புரட்ட்ச்சிக்கவி பாரதிகள் வேண்டும்......


புன்னகை


மனித பிறப்பிற்க்கு மட்டும்
இறைவன் கொடுத்த பரிசு...
பெற்ற பரிசை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள்
எப்பொழுதும்.....


குழந்தை

குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்பதற்க்காக.....
குழந்தைக்கு கடவுள் வேஷமிட்டு....
பிச்சை எடுக்க வைக்கும்
கல் நெஞ்சக்காரர்கள்......


Sunday, June 21, 2009

அனாதை

அவளின் பத்து நிமிட சுகத்துக்காக...
உன்னை திருட்டுதனமாய்
பெற்றடுத்து......
குப்பைதொட்டியில் வீசி விட்டாள்
இனி உன் பெயர் அனாதை....

Thursday, June 18, 2009

அம்மா


நம் கண்முன்னே நடமாடும் தெய்வம்!!
நமக்கு
உயிர் கொடுத்த பிரம்மா!!
அந்த
கடவுளை முதியோர் இல்லம்
என்னும்
சிறையில் அடைக்கிறார்கள்
நாத்திக
மகன்கள்....
நாத்திகம்
இருக்கட்டும் ஆனால்
நம்
அம்மாவிடம் அல்ல.........


தினமும் உன்னுடன்

தினமும் உன்னை பார்த்துக்கொண்டே
விழித்த எனக்கு
இன்று மட்டும் முடியவில்லை....
அதற்க்குள் என் உறக்கம் நீங்கி
என் கனவும் கலைந்துவிட்டது......


காத்திருந்தேன்

உனக்காக காத்திருந்த பொழுதுகளில்
வராத நீ.......
உன் கல்யாணத்திற்க்கு மட்டும்
என்னை கூப்பிட எதற்க்கு வந்தாய்........


கண்ணீர்

மேகமாய் வந்து
மழையாய் பொழிந்து
என் கண்களில் கண்ணீரை
ஆறாக பெருக்கெடுத்து ஒடவைத்தாய்
என்னை விட்டு பிரிந்து சென்று.........


வரம்

கடவுள் தோன்றினால் அவரிடம்
ஒன்று மட்டும் கேட்பேன்....
மனிதப்பிறப்பே வேண்டும்
மறு ஜென்மத்திலும்
உன்னை அடைந்துவிட.......


இதயம்

இதயம் மறப்பதில்லை
உன்னை பிரிந்த வலியை.......
மறந்துவிடவும் நினைப்பதில்லை
நாம் சந்தித்த நினைவுகளை........


கைது


உன் கண்களால்
என்
இதயத்தை கைது செய்தாய்.....
ஏன்
உன் இதயச்சிறையில்
வைத்து
மட்டும் என்னை
பூட்ட
மறுக்கிறாய்......


தவம்


உன்னை நான் சந்தித்திட
என்ன
தவம் செய்தேனோ
போன
ஜென்மத்தில்.......

உன்னை
மட்டும் பிரிந்திட
என்ன
பாவம் செய்தேனோ
இந்த
ஜென்மத்தில்........


Wednesday, June 17, 2009

சுமை



புத்த சுமையை விட இந்த கற்கள் சுமை கம்மியானதென்று அனுப்பிவிட்டர்களா இவர்களின் கல் நெஞ்சக்கார பெற்றோர்கள்????

குழந்தை தொழிலை ஒழிப்போம் முதலில்.... இந்தியா வல்லரசு நாடாக......

மின்னல்


உன்னை பார்த்த நொடியில் இடியாக நுழைந்தாய் என் இதயத்தில்..... கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலாய் மறைந்து சென்றாய்.....
உன்னை காற்றாக தொடர்ந்துவர
நான் என்ன புயலா?.....

என் அருகில் நீ இருந்தால்


என் அருகில் நீ இருந்தால்
நம்மை
பிரிக்க
காற்றால் கூட முடியவில்லை.......



Tuesday, June 16, 2009

அழகு

உன்னை பார்த்த பின் தான்
அழகு என்பதின்
அர்த்தம் புரிந்தது......