Thursday, October 22, 2009

மரணம்

நீ இல்லாத இவ்வுலகில்
இறைவனிடம்
நான் கேட்கும் வரம்....


மழை

மழை நனைந்து
வீடு வர ஆசை உண்டு
நீயும் பதறிபோய்
உன் புடவை முந்தனையால்
என் தலை துவட்டி
விடுவதால்....


வரம்

கடவுள் தோன்றினால்
உனக்கு முன் நான்
இறந்து போகும் வரம் கேட்பேன்
உன் பிரிவு என்னால்
தாங்க இயலாதென்பதால்....
மறு ஜென்மத்திலும்
உனக்கு முன் நான்
பிறக்க வரம் கேட்பேன்
உன்னையே கரம்பிடிக்க
வேண்டுமென்பதால்....



Saturday, September 26, 2009

பிறவிப் பயன்

வருடங்கள் வேண்டாம்
மாதங்கள் போதும்...
நாட்கள் வேண்டாம்
சிலமணி நேரங்கள் போதும்...
நிமிடங்கள் வேண்டாம்
நொடிகள் போதும்...
நீ என்னோடு வாழ்ந்தால்
என் ஆயுள் காலத்திற்கு...
இந்த பிறவிப் பயனை அடைந்திட....


கனவும் நீயும்

இரவில் விளக்கை அணைக்காமல்
ஏன் உறங்குகிறாய் என்றார்கள்
நீ என் கனவில்
நித்தமும் பிரகாசமாய்
வருவது அறியாமல்....
இரவு விடிவதே
பிடிப்பதில்லை கனவு
கலைந்து நீயும்
சென்று விடுவதால்....


மனம்

தெளிந்த நீரோடையை
போல் இருந்த என் மனம்
உன்னை கண்டப்பின்
கல்லெறிந்து கலங்கியது
போல் ஆனது...


Monday, August 24, 2009

என்ன தருவாய்

உதடுகளை கேட்டதற்கு
முத்தத்தை தருகிறாய்
அன்பை கேட்டதற்கு
காதலை தருகிறாய்
இதயத்தை கேட்டதற்கு
உன்னை தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்....


Thursday, August 20, 2009

மீண்டும்

இந்த பிரபஞ்சத்தில்
நான் மீண்டும் மீண்டும்
உயிர்த்து எழுவேன்
உன் காதலை
வெற்றி கொள்ளும் வரை....


Monday, August 17, 2009

பிடித்தவை

இருள் தனிமை
நிசப்தம்....
எனக்கு மிகவும்
பிடித்தவை....
உன் நினைவுகள் மட்டும்
அங்கு அரங்கேறுவதால்....


நிழல்

உன் நிழலோடு
யூத்தமிடுகிறேன்....
உன் நிழலாய் உன்னோடு
நான் வருவதற்கு....



மௌனம்

செவிடாய் ஊமையாய்
பிறந்திருக்கலாம்
உன் மௌன மொழியை
புரிந்துகொள்வதற்கு....


Thursday, August 13, 2009

இதயம்

உன்னை சந்தித்தது
சில நொடிகள் ஆயினும்....
உன்னையே சிந்தித்தது
அக்கணம் முதல்
என் இதயம்....
அழகின் திகைப்பா....
காதலின் தேடலா....


Tuesday, August 11, 2009

பூக்கள்


எல்லா பூக்களும்
காலையில் பூத்து
மாலையில் வாடுகின்றன
உன்னைத்தவிர....


ஒருமுறை


எல்லார் வாழ்விலும்
ஜனனம் ஒருமுறை
மரணம் ஒருமுறை
இதனிடையில் காதல் ஒருமுறை....

ஜனனம் காதல் மரணம்
இவை மட்டுமே
என்வாழ்வாகிப்போனது....


மனிதனாக


இந்த பூமியில்
குழந்தையாய் ஜனித்து...
மகனாய் மகளாய்
தந்தையாய் தாயாய்
தாத்தாவாய் பாட்டியாய்
பல பரிமாணங்களில்
வாழ்கிறோம்...
மனிதனாகவும்
வாழ்ந்திடுங்கள்....


கண்ணீர்

உன் நினைவுகள்
என்னில் கலந்து
கண்ணீராய் வழிகிறது...
நீ என்னை பிரிந்து
சென்றதும்....



Friday, August 7, 2009

உன் முகம்

விண்ணுக்கும் எனக்கும்
நெருக்கம் அதிகம்....
ஏனன்றால் இரவில்
நான் நிலவோடும்
நட்சத்திரங்களோடும்
பேசும் நாட்கள் அதிகம்
அவற்றில் உன் முகம்
தெரிவதால்....


Wednesday, August 5, 2009

கல்யாணம்

இடி மேளமாய் முழங்க....
மின்னல் வான
வேடிக்கையாக....
வானவில் தோரணமாக....
மழை அட்சதையாக....
விண்ணுக்கும் மண்ணுக்கும்
கல்யாணம்....


உறவு

தாய்
தொப்புள்கொடி உறவு....
உடன்பிறப்பு
ரத்த உறவு....
மனைவி
தாலிக்கொடி உறவு....
நண்பன்
உயிரின் உறவு....


வென்றிருப்பேன்

நான் உனக்காக
காத்திருந்த பொழுதுகளில்....
நீ என்னோடு
வாழ்ந்திருந்தால் போதும்....
இந்த பிரபஞ்சத்தையே
வென்றிருப்பேன்....


மனிதாகிறேன்

தாயின் அரவணைப்பு....
தந்தையின் பாசம்....
மனைவியின் அன்பு....
குழந்தையின் சிரிப்பு....
நண்பனின் நட்பு....
இவற்றை துறந்து
முனிவனாக வேண்டாம்....
நான் முதலில்
மனிதனாகிறேன்....



Monday, August 3, 2009

நண்பர்கள் தினம்


பல்வேறு தினங்கள்
கொண்டாடினாலும்....
உலகம் முழுதும்
வயது மொழி
வேறுபாடின்றி....
கொண்டாடுகிறோம்
நண்பர்கள் தினம்....
நட்பு உணர்வுகளால்
உருவாகிறது....
உறவாலும் காதலாலும் அல்ல....


Sunday, August 2, 2009

தாய் மாமன்

இறைவன் படைப்பில்....
தாயின் மற்றொரு
பரிமானம்....
தாய் மாமன்....

நிலா பெண்ணே


லட்சம்பேர் நடுவிலும்
நீ மட்டுமே
பிரகாசமாய் தெரிகிறாய்....
நீ நிலா பெண்ணா....
ஏனென்றால் இருளிலும்
நிலா மட்டுமே
பிரகாசமாய் தெரியும்....

பதில் தெரியவில்லை

மகள் கேட்டாள்....
ஊனமுற்றவர்களும்
மனவளர்ச்சி குன்றியவர்களும்....
ஏன் பிறக்கிறார்கள் என்று....
பதில் தெரியாமல்
இறைவனிடம் கேட்க
வேண்டும் என்றேன்....

யார் என்பது உன்னை....

அறிவுரையில் ஆசானாய்....
கண்டிப்பில் தாயாய்....
பாசத்தில் மகளாய்....
பகிர்ந்துகொள்வதில் தோழியாய்....
இருக்கும் உன்னை
மகள் என்பதா....
இல்லை யார் என்பது....

அன்பு மனைவிக்கு


பிறந்த வீட்டை விட்டு....
என் சுக துக்கங்களை
உன்னுடையதாக்கி....
நானே உலகமாய்....
வாழும் உன்னை....
என்னுள் பாதியாய்....
அர்த்தனரீஸ்வரராய்
பார்க்கிறேன்....

Saturday, August 1, 2009

அன்பு தாத்தா


அன்று உங்கள்
கை பிடித்து
நடந்த நான்....
இன்று என்
கை பிடித்து
நடத்தி செல்கிறேன்
உங்களை....
இன்னும் பல
ஆண்டுகள் இது போல
நடந்துவிட
ஆசை தாத்தா....


தேர்தல் வந்தாச்சு

தேர்தல் வந்தாச்சு...
சோம்பேறி பாமரனுக்கு
சந்தோசம்...
இலவசங்கள்
எராளம் கிடைக்கும்...
சம்பாதிக்கும்
அனைத்தையும்
குடிக்கலாம் இனி....
மகன் கேட்ட
பள்ளி படிப்பை
அடுத்த தேர்தலில்
இலவச பாடத்திட்டம்
வரும் சேரலாம்
என்றான்....


நிலா சோறு


அன்று அம்மா
இன்று மகள்....
இருவர் ஊட்டிய
நிலா சோறும்
ருசித்தது எனக்கு....
ஒரே வித்யாசம்
அம்மா மடியில் நான்
என் மடியில் மகள்....


உரிமை

இரவுக்குப்பின் வரும்
வெளிச்சத்தை போல....
உன் பெயருக்குப்பின்
என் பெயரை எழுதும்
உரிமையை கொடு....


Sunday, July 26, 2009

கண் தானம்


இவர்கள் எதுவும்
பார்த்ததில்லை....
காதலித்ததில்லை....
அழகின் ரசனை....
வெளிச்சத்தின் ஒளி....
வர்ணத்தின் ஜாலங்கள்....
யாவும் கண்டதில்லை....
நம்பிக்கையோடு
வாழ்கிறார்கள்....
விடியல் வரும் என்று....

ஜோதிடம்

நல்ல நேரத்தில்
ஆரம்பித்த தொழில்
நஷ்டத்தில்....
பொருத்தம் பார்த்த
திருமணம் விவாகரத்தில்....
எதுவும் பார்க்காமல்
சேர்ந்த நட்பு
இன்னும் தொடர்கிறது....
ஜோதிடம்
பொய்யா மெய்யா
விடைதேடிக்கொண்டிருக்கிறேன்.....

இரவுகள்

இரவுகள் விடிய
அதிக நேரங்கள்
ஆகட்டும்....
கனவிலாவது
நீ என்னோடு
இருக்கும் நேரங்கள்
அதிகமாகும்
என்பதால்....

மறுஜென்மம்


வேண்டாம் எனக்கு
மறுஜென்மம்
உன்னை அடையாவிடின்
என் செய்வது....
உன்னோடு வாழ்ந்த
இந்த ஜென்மமே
போதும்....

வெளிச்சம்


இவர்களுக்கு
விடிந்தும்
வெளிச்சமில்லை....
இவர்கள்
குருடர்கள்....

தவறுகள்

பிரம்மன் உன்னை
படைத்தது....
நான் உன்னை
சந்தித்தது.....
இறைவன் நம்மை
பிரித்தது....
தவறுகள் திருத்தபடட்டும்
மறுஜென்மத்தில்....

ஐயனை தரிசிக்க...


காலணி இல்லாமல்...
கைசட்டை கால்சட்டை
அணியாமல்...
ஊர்தி ஏதும் இல்லாமல்
வெளியில் செல்லமாட்டோம்....
வேட்டி மட்டும் அணிந்து...
மேல்சட்டை இல்லாமல்...
வெற்று காலுடன்...
மலை பாதையில்
கற்கள் பாதத்தை
பதம் பார்க்க நடக்கிறோம்
ஐயனை தரிசிக்க நாங்கள்...
சுவாமியே சரணம் அய்யப்பா.....

Friday, July 24, 2009

வானவில்


வானம் கூட
எட்டி பார்த்தது
மழை பெய்யாமல்
வானவில்லா....
நீ இங்கு
வந்து போனது
தெரியாமல்....


Thursday, July 23, 2009

ஆசை


கண்ணிமைக்கும்
பொழுதுகளில் மட்டும்
உன்னை காண
ஆசை....
மூச்சு விட மறக்கும்
தருணத்தில் மட்டும்
உன்னை மறந்து விட
ஆசை....


அழகிய ஓவியம்


இறைவன் படைப்பில்
ஒரு அழகிய
ஓவியம்....
குழந்தையின் சிரிப்பு....


மறந்தேன்


எல்லாவற்றையும்
மறந்த நான்....
உன்னை மட்டும்
மறக்க மறந்தேன்....


Wednesday, July 22, 2009

தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து


ஆலமரமாய் நீங்கள்...
கிளைகளாய் நாங்கள்
உயர்ந்து விரிந்தாலும்...
ஆழமான வேராய்
நீங்கள் இருந்து
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்....


சுவடுகள்


கடற்கரை மணலில் பதிந்த
உன் பாத சுவடுகளை
அளவெடுத்து வரைந்தேன்....
அழகிய ஓவியம்
என்றார்கள்....


வெளிச்சம், இருட்டு


இமைகள்
மூடி
இருந்தேன்
வெளிச்சமாய் நீ....
கண் திறந்து
பார்த்தேன்

இருட்டாய்
என்
அறை....


புரியவில்லை


நீ அருகில்
இருந்த
பொழுது
வராத உன் எண்ணங்கள்....
நீ விலகி சென்ற பொழுது
காட்டாற்று வெள்ளமாய்
ஓடுகிறது மனதில்....
காரணம் புரியாமல்
விடை தேடிக்கொண்டிருக்கிறேன்
ஏன் என்று....


Tuesday, July 21, 2009

வரம்


இறைவன் எனக்கு
கொடுத்த
வரம்
என் மகள்....

Wednesday, July 15, 2009

ஜாதி

ஜாதி சான்றிதள்
கொடுத்து சேர்த்திய
பள்ளியின் பாடத்தை
படித்துக்கொண்டிருந்தாள்
என் மகள்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா"....


உன்னால்

சொர்க்கம் உண்டு என்று
நம்பியதில்லை
உன்னை காணும் வரை....
நரகம் உண்டு என்று
நம்பியதில்லை
உன்னை பிரியும் வரை.....


தனிமை


நான் தனிமையில்
இருப்பதைவிட....
உன்னுடன் கழிக்கும்
பொழுதுகளே அதிகம்....
கனவில் மட்டும்.....


Friday, July 10, 2009

உன் வார்த்தை

என் மரணத்தை விட
உன் வார்த்தைகளுக்கு தான்
பயந்து
மதிப்பளிக்கிறேன்.....


கனவு


உன் காதல்
கடிதங்களுக்கு
பதில் எழுதுகிறேன்
கனவில் மட்டும்....


புரியவில்லை


கண்டவுடன் மௌனம்
சாதித்தும்...
தலை கவிழ்ந்ததும்...
காதல் வெக்கத்தில்
என்று நினைத்தேன்....
என்னை பிடிக்காமல்
செய்தாயென்று தெரியாமல்....


மௌனம்


கத்தியின்றி
ரத்தமின்றி
என்னை கொல்லும்
ஓர் ஆயுதம்
உன் மௌனம்.....


Wednesday, July 8, 2009

நம் காதல்


நான் இதயமாக
நீ உயிராக....
நான் கண்களாக
நீ கருவிழியாக....
நான் காற்றாக
நீ சுவாசமாக....
மொத்தத்தில் நீ இன்றி
நான் இல்லை....


Tuesday, July 7, 2009

பிரிவு

பிரிந்தது நாம் மட்டும் தான்....
நம் உள்ளங்களும்
நம் காதலும் அல்ல...
என்றும் நம் காதல்
நினைவுகளுடன்....



Monday, July 6, 2009

உடன்பிறப்புக்கள் - ப்ரீத்தி, வித்யா, சந்தனா, ரவி, அசோக், பிரனேஷ், ஹரி, கிரி, அபர்னா வுக்கு


வேறு வேறு கருவறையில்
நாம் பிறந்திருந்தாலும்....
நம் அனைவரின் உள்ளங்களும்
ஒன்றுபட்டு....
பல உடல் ஓர் உயிராக...
பாசப்பிணைப்புடன்....
உனக்கு நான் எனக்கு நீ என்று
இன்று போல் என்றும்
நம் அன்பு....
நிலைத்திருக்க வேண்டும்....

அன்று நம் சிறு வயதில்
பள்ளி விடுப்பு நாட்களில்
நாம் விளையாடியது,
செல்ல சண்டை போட்டது....
அனைத்தையும் திரும்பிப்பார்க்கிறேன்
ஏக்கத்தோடு.....

மறு ஜென்மமும் நாமே
உடன்பிறப்புக்கள் ஆவோம்.....


Thursday, July 2, 2009

என் இதயம்


என் நினைவுகளை மறந்து
உன் நினைவுகளை மட்டும்
நினைத்துக்கொண்டிருக்கும்
ஒரு இதயம்.......


கல்லூரி

என் முதல் காதல்
பிறந்த இடமும்
இறந்த இடமும்....


Tuesday, June 30, 2009

வெளிச்சம்

இரவில் சூரிய வெளிச்சம்
என்றேன்...
ஆச்சிர்யம் என்றார்கள்.....
நீ என் அருகில் இருப்பது
தெரியாமல்.....


கனவும் நிஜமும்


நான் உன்னை காதலிக்கறேன்
என்று கூறியபொழுது
நீ புன்னகைத்து கூறினாயே
நானும் தான் என்று
அது கனவு....
நான் கூறியவுடன்
முறைத்தாயே அது நிஜம்....
கனவு சிலிர்க்கிறது....
நிஜம் சுடுகிறது....